பக்கம்:இருட்டு ராஜா.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் ( 129 பார்த்துக் கொள். மூக்கா, உனக்குச் சொல்ல வேண்டி யதை எல்லாம் சொல்லியாச்சு. எங்கே இருந்தாலும், என்ன தொழில் செய்தாலும்,மன நிறைவோடு சந்தோஷ மாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்க. எங்களுக்குக் கடிதம் எழுத மறக்க வேண்டாம். சரி, நாங்க வாறோம்' என்று விடைபெற்றான் முத்துமாலை. ராமதுரையும் சொல்விக் கொண்டு புறப்பட்டான். புதுமணத் தம்பதிகள் கண்கலங்க வணக்கம் தெரி வித்தார்கள். 'இது இப்படி முடியும்னு நான் நினைக்கவேயில்லை” என்று ராமதுரை முத்து மாலை யிடம் சொன்னான். 'காலம் வழி அமைத்துக் கொடுக்கிறது. வாழ்க்கை தன் போக்கில் முன்னேறுகிறது' என்றான் முத்து 碧JDf了莎安}。 'அம்மாவை எப்படி சமாதானப்படுத்தப் போறேனோ எனக்கே தெரியலே’ என்று நெடுமூச்சுயிர்த்தான் துரை. "எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்” என்று முத்துமாலை ஆறுதல் கூறினான்.