பக்கம்:இருட்டு ராஜா.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 முத்துமாலையும் ராமதுரையும் பஸ் நிலையத்தை நோக்கிப் போய் கொண்டிருந்தார்கள். எதிரே வந்த இருவரைப் பார்த்ததும், ஹே, இவங்க கூட கோயிலுக்கு வாராங்களா!' என்று கிண்டலாகக் குறிப்பிட்டான் துரை.

தானும் நீயும் கோயிலுக்கு வந்திட்டுப்போறோமே; மத்தவங்க வாறதிலே என்ன ஆச்சர்யம் இருக்கு:

என்றான் முத்துமாலை அதுக்கில்லே. இவங்களை உங்களுக்குத் தெரியாது? நம்ம ஊரு அணஞ்ச பெருமாள் பிள்ளை மருமகன் குமர குருவும், அவனோட அம்மா இசக்கியம்மாளும்தான். இவங்க ஒரு பெண்ணை வாழவிடாமல் துரத்தி அடிச்சு -ب : புண்ணியம் சம்பாதிச்சிருக்காங்களே! இப்போ கோயி லுக்கு வந்து என்ன வரம் கேட்கப் போறாகளோன்னு நினைச்சேன். ' - 'ஒகோ' என்று நீட்டி இழுத்த முத்துமாலை எதிரே வத்து கொண்டிருந்த அம்மாளையும் மகனையும் கூர்ந்து நோக்கினான். அவர்கள் அருகில் வந்ததும், வாங்கம்மா... வாங்க தம்பி' என்று ரொம்பத் தெரிந்தவன் மாதிரி விசாரித்தான். - அவர்கள் தயங்கி நின்றார்கள். "ஆமா, நீங்க யாரு, தெரிய லியே?’ என்று அந்த அம்மாள் வார்த்தைகளை மென்றாள். -