பக்கம்:இருட்டு ராஜா.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 0 இருட்டு ராஜா "நம்மகையிலே என்னடே இருக்கு. துரை! ஒவ்வொரு வர் வாழ்க்கை எப்படி எப்படியோ அமைஞ்சு போகுது' என்று சுரத்தில்லாமல் பதிலளித்தான் முத்துமாலை. "அது சரி என்று ராமதுரை உறுதியாகக் கூறினான். "நான் முடிவு பண்ணிட்டேன். நாம நீலாவை பார்த்த தையோ மூக்கனும் அவளும் தாலி கட்டிக் கொண்டு தனியாப் போயிட்டதையோ நான் அம்மாவிடம் சொல்லப் போறதில்லே. ஊரிலே எவருக்கும் தெரிவிக்கப் போறதில்லே...' "தெரிவிச்சுத்தான் என்ன ஆகப்போகுது?’ "அதுதான். நன்மை எதுவும் ஏற்படாது, கண்டபடி பேச்சுகள்தான் பரவும். நீங்களும் யாரிடமும் சொல்ல வேண்டாம். எப்பவாவது தானாத் தெரிஞ்சால் தெரிஞ் சிட்டுப் போகுது' என்றான் துரை. - "ஊம். நாங்க அலைஞ்சு திரிஞ்சு பார்த்தோம், நீலா எங்க கண்ணிலே படவேயில்லே. எங்கே போனாளோ என்னா ஆனாளோ தெரியாதுன்னு யாராவது என்ன ஏதுன்னு நம்ம கிட்டே தூண்டித் துளைச்சுக் கேட்டால் சொல்விப் போடுவோம்’ என்று முத்துமாலை ஆமோதித்தான். 18 அன்று இரவே முத்துமாலை ஊருக்குத் திரும்பிவிட வில்லை. மறுநாள் தான் வந்து சேர்ந்தான். - • , வந்த உடனேயே அவன் காதில் விழுந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சி தந்தது.