138 இருட்டு ராஜா
இந்த அடிகளையே அவன் திரும்பத் திரும்பப் பாடினான்.சில சமயம் சொற்கள் சிதைந்து,அவன் அழுது அரற்றுவது போலவே குரல் ஒலித்தது.
19
முத்துமாலைக்குக் குழந்தைகளிடம் மிகுந்த பிரியம். பார்ப்பதற்கு சிறிது வசீகரமாக உள்ள எந்தக் குழந்தை யையும் அவன், ஆசையோடு துரக்கி வைத்துக்கொள் வான். கொஞ்சுவான். போகிற இடத்துக்கெல்லாம் எடுத்துக் கொண்டு போவான். அது கேட்கிறதை எல்
லாம் வாங்கிக் கொடுப்பான். -
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே, முத்துமாலை பிள்ளைகளிடம் பாசமா, பிரியமா இருக் கிறதுனாலே பிள்ளைகளும் அவன் கிட்டே ஆசையாப் போகுது. மாமா, மாமன்னும், தாத்தா தாத்தான்னும் புள்ளைக அவனை சுத்திச் சுத்தி வரும்’ என்று சில 'அம்மாளுக' சொல்வார்கள்.
"மாமா, எனக்கு ஏரேப்ளேன் செய்து கொடு' கப் பல் பண்ணித் தா' மைக்கூடு செய்யி என்று குழந்தைகள் தாள்களை அவனிடம் கொடுத்துப் பஞ்சரிக்கும். -
அவனும் விதம்விதமாக அனைத்தையும் செய்து கொடுப்பான். அட்டையில் கிளியும், மயிலும், மனிதனும், மரமும் வரைந்து கத்திரி வைத்து வெட்டிக் கொடுப்பான். வேடிக்கை காட்டி பிள்ளைகளைக் சிரிக்க வைப்பான். குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லுவான்.
பக்கம்:இருட்டு ராஜா.pdf/140
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
