பக்கம்:இருட்டு ராஜா.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 139 ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு குழந்தையின் பேரில் அவனுக்கு அலாதியான பிரியமும் பற்றுதலும் ஏற் பட்டுவிடும். அதை வீட்டுக்கு அழைத்து வருவான். விளை யாட்டுக் காட்டி மகிழவைத்து அந்தக் குழந்தை சிரிப் பதைப் பார்த்துத் தானும் களிப்படைவான். இப்போது அவனுக்கு மங்கையர்க்கரசியின் மீது பிரியம் வளர்ந்து வந்தது.திரிபுரத்தின் மகள் என்பதனால் மட்டுமல்ல. அது யார் பிள்ளை என்று தெரியாமல் இருந்தபோதே, அம்மன் கோயிலில் தன்னந்தனியாகக் காண நேரிட்ட முதல் சந்திப்பிலேயே, அந்தக் குழந்தை யிடம் முத்துமாலைக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டுவிட்டது. அதனுடைய கூச்சமில்லாத சுபாவமும், தயக்கமின்றிப் பேசுகிற குணமும் அவனை வெகுவாக ஈர்த்தன. மங்கை அவனைக் காண்கிறபோதெல்லாம் ஒரு பாட்டை நீட்டி நீட்டிப் பாடும். "அத்தான் பொத்தைக் கதா அயகுள்ள பூசணிக்கா: மயபெஞ்ச முத்தத்திலே பொத்துன்னு வியந்தாயாம் பட்டுன்னு வெடிச்சாயாம்!' பாட்டின் முடிவிலே 'டோ டோ டோய்' என்று கூவி, கைகொட்டி கலகல என்று சிரிக்கும். அப்போது அதன் முகம் மிக வசீகரமான பெரிய புஷ்பம் மாதிரி ஒளிரும். அப்படியே அதை அள்ளி எடுத்து முத்தமிட்டு போக்கிரி கழுதை' என்று செல்லமாகக் கன்னத்தை கிள்ளுவான், சிரிப்பான். திரிபுரம் அவனை அத்தான்” என்று அழைத்ததி லிருந்து, மங்கை இந்தப் பாட்டை பாடத் தொடங்கி