பக்கம்:இருட்டு ராஜா.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 149 முத்துமாலை பெருமூச்செறிந்தான். :என்ன வாழ்க்கை! என்ன மனுசங்க! எனக்கு எதுவுமே பிடிக் கலே’ என்றான். -சே, திரிபுரம் என்னன்னமோ பேசிப் போட்டா: அவ என்னை புரிஞ்சுக்கிடவே இல்லையே! இதை அவன் வாய் விட்டுச் சொல்லவில்லை. ~<g/6/63)63r நெனைக்கையிலே பாவமாகத்தான் இருக்கு. திரிபுரம்தான் என்ன செய்வா பாவம். வேதனையால் குமைந்து புழுங்கினான் முத்துமாலை. 21 அன்று வழக்கம் போல்தான் பொழுது விடிந்தது. ஆனால், சிவபுரத்துக்கு அது வழக்கம் போல் மற்றும் ஒரு நாளாக அமையவில்லை. விபரீதமான செய்தியை வைத்திருந்தது. இருட்டு. விடிவின் பேரொளி அந்த ஊர்க் காரர்களுக்கு அதிர்ச்சியைக் கொண்டு தந்தது. -ஐயோ, இப்படியும் நடக்குமா!... அவனுக்கு இது மாதிரிச் சாவு வரும்னு யாரு நெனச்சா?... முத்துமாலை திடீர்னு செத்துப் போவான்னு யாரு கண்டது?... -பாவி போயிட்டானே... ஊரை ஊரை சுத்தி வரு வானே... சவத்து மட்டை குடிச்சுக் குடிச்சுக் கெட்டான். -குடிகாரனாத் திரிஞ்சாலும் யாருக்குமே தீங்கு செய்யமாட்டானே. நன்மையை நெனச்சு நல்லதுகளைக் செய்யனுமின்னுதான் அலைஞ்சான்! இப்படியா பொட் டுப் பொடுக்குன்னு போகணும்? இந்த விதமாகவும் இன்னும் பலவாறும் பேசினார் கள். ஆண்களும் பெண்க்ளும் ஆற்றாமையோடு புலம்பி னார்கள். இ-10