பக்கம்:இருட்டு ராஜா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்விக்கண்ணன்15

 பெரிய ஹீரோ ஆயிருவே சீக்கிரமே!” என்று காசி சொல்வான்.

காசி முத்துமாலை கூடப் படித்தவன்.இரண்டு பேரும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர்கள். தங்கராசுவும் அவர்களோடு படித்தவன்தான். ஆனால் அவன் நல்ல பையன்; ஒழுக்கத்துக்கு எடுத்துக் காட்டு. ஒவ்வொரு வகுப்பிலும் நன்னடத்தை (குட் காண்டக்ட்) க்கான பரிசு அவனுக்கே கிடைத்து வந்தது.

“முத்துமாலை ஒழுக்கம், நேர்மை, நியாயம், நல்லவனாக இருக்கிறது என்பதெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நல்லது. ஜனங்கள் இதுகளை மதிக்கிறதேயில்லை. ஒழுங்காக நடக்கிறவன், நேர்மையா நியாயமா செயல் புரிகிறவங்க, நல்லவங்களா வாழ முயல்கிறவங்களை, மதிக்கிறதை விட, துணிஞ்சவங்சளை, அடாவடித்தனம் பண்றவங்களை, கொள்ளையடிச்சுப் பணம் பண்ணுகிறவங்களை, மத்தவங்களை ஏமாத்தியும் மிதிச்சும் தாங்கள் உயர்வதற்கு வழி பண்ணிக்கிறவங்களைத்தான் ஜனங்க கெட்டிக்காரங்க என்றும்; வாழத் தெரிஞ்சவங்க, சாமர்த் தியசாலிகள், மரியாதைக் காட்டப்பட வேண்டியவங்க என்று நினைக்கிறாங்க. அடக்கம் அமரருள் உய்க்கும் கிறதுக்கு நேரடியான அர்த்தம் உனக்குத் தெரியுமா? ”அடக்கமாக இருப்பது உன்னை இந்த உலகத்திலே வாழ வைக்காது; சீக்கிரமே செத்துப் போகும்படி செய்யும் என்பதுதான்”

இவ்விதம் ஒரு முறை லெக்சரடித்து விட்டு காசி சத்தம் போட்டுச் சிரித்தான். “கடகட என்று சிரித்தானய்யா ராசா தேசிங்குன்னு பாடுவாங்களே, அது மாதிரி சிரிக்கப் பழகுறேன்” என்றும் அவன் சொல்வது உண்டு.

காசி முத்துமாலையை விட இரண்டு வயது மூத்தவன். ஆனாலும் அவன் தனது வயதுக்கு மீறிய அறிவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/17&oldid=1138946" இலிருந்து மீள்விக்கப்பட்டது