பக்கம்:இருட்டு ராஜா.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 0 17 இவ்வளவுக்கும் காசி பெரிய பயில்வான் ஒன்று மில்லை. ஒல்லி, நல்ல உயரம், சாதுவான முகம், மீசை கூடக் கிடையாது.கும்பவில் அவனைத் தனியாக எடுத்துக் காட்டக்கூடிய விசேஷப் பொலிவு எதையும் அவனுடைய நடை உடை பாவனைகள் கொண்டிருக்கவில்லை. ஆனாலும், ரொம்ப ரொம்பப் பேர்-பலபல ஊர்க் காரர்கள்-அவன் பெயரைச் சொல்லிப் பயப்பட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் என்ன? அவன் துப்பாக்கி வைத்திருந்தது மட்டும்தானா? இல்லை. அஞ்சி அஞ்சிச் சாவது மனித சுபாவமாக இருந்தது. பெரும்பாலோரி டம் இல்லாத் நெஞ்சுத் தைரியம்- எதுக்கும் துணிந்த ஒரு எடுப்பான போக்கு காசியிடம் இருந்தது. இது முத்துமாலையின் மன ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்தது. முத்துமாலை காசி மாதிரி வெகுவாகத் துணிந்த கட்டை இல்லை. தங்கராசு மாதிரி ஒழுக்கம் நிறைந்த நல்லவனுமில்லை. அவனிடம் நற்குண அம்சங்களும், தீயகுண அம்சங்களும் கலந்திருந்தன. ஒவ்வொருவரிடமும் சில சில இயல்புகள் மேலோங்கிச் செயல் புரிவதற்கு அவரவர் பெற்றோர்களின் பாதிப்பு, சூழ்நிலை பாதிப்பு, சுற்றுப் புற மனிதர்களின் தாக்கம், சகவாச தோஷம் எல்லாம் காரணங்களாகின்றன. அவர வர்களுடைய மனப் போக்கும் ஆசைகளும் பல்வேறு உணர்ச்சிகளும் துரண்டுதல்களாகின்றன. முத்துமாலையின் அப்பா பூவுலிங்கம்பிள்ளை மகனி டம் பிரியமோ பாசமோ கொண்டிருந்ததில்லை. சில சமயங்களில் அவர், அவனை வெறுக்கவும் செய்தார். அவ்வப்போது, காரணத்தோடும் காரணம் இல்லாமலும் அவர் அவனை அடிப்பது உண்டு. அவன் படித்துக்