பக்கம்:இருட்டு ராஜா.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 இருட்டு ராஜா ரொம்ப நேரம் ஆன பிறகு, முத்துமாலையின் சத்தம் மதுபடியும் நெருங்கிவந்த போது, தங்கராசு எழுந்து திண்ணையில் காத்திருந்து, அவன் கவனத்தைக் கவர்ந் தான். பேசினான். பதிலும் பெற்றான். - ஆனாலும், அவனுடைய ஆச்சரியம் எங்கே குறைந் தது? 3 தங்கராசுவை ஆச்சரியமாகப் பார் த் தா ள் அவன் அம்மா மறுநாள் காலையில். முத்துமாலையோடு தான் பேசியதைப் பற்றி அவனே அவளிடம் சொன்ன போது தான், "ஆங், அப்படியா? அவன் சீறி விழலியா? முறைக் கலியா?' என்று கேட்டாள். "அவன் என்ன வெறி மிருகமா சீறிப் பாயறதுக்கு? இல்லே நல்ல பாம்பா? அவனும் நம்ம மாதிரி மனுசன் தானே? என் கூடப் படிச்சவன் தானே ஒரு காலத்திலே!' என்று தங்கராசு சொன்னன். 'இருந்தாலும், ராசு, எல்லா மனுசங்களும் ஒண்ணு போலவா இருக்கிறாங்க? நாய்க்குணம், நரிக் குணம், பேய்க் குணம் பெற்றவங்களும் இருக்கதானே செய்ய றாங்க?" 'துஷடமிருகங்க கூட அதது.பாட்டுக்கு, தான் உண்டு தன்காரியம் உண்டுன்னுதான் போகும் அம்மா. நாம அது