பக்கம்:இருட்டு ராஜா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்25

 கிட்டே போய் சேட்டை பண்ணுனா, அதை தாக்கினா, சீண்டி விட்டால்தான் அதுக எதிர்க்கும், பசி அல்லது வெறி ஏற்படுகிற சமயங்களிலும் தாக்கும்...”

“சும்மா போகிற போக்கிலே முறைக்கிறதும் எதிர்க்கிறதும் சில மிருகங்களின் சுபாவம்தான். சில மனுசங்கிட்டேயும் அந்தக் குணம் இருக்கு” என்றாள் அவன் அம்மா.

“இருந்திட்டுப் போகுது! நாம பிரியமும் அன்பும் காட்டினா மத்தவங்களும் அப்படியே நம்மிடம் நடப்பாங்க. நாம வெறுத்து ஒதுக்கினா, மத்தவங்களும் நம்மகிட்டே வெறுப்புக் காட்டுவாங்க!”

“அதெல்லாம் சரிதான் ராசு. எதுக்கும் நீ முத்துமாலையை விட்டு விலகியிருக்கறதே நல்லது. அவன் கிட்டே பேசிப் பழகனும்கிற ஆசையை விடுட்ரு. அது உனக்கு நல்லது செய்யாது” என்று அம்மா உபதேசித்தாள்.

“சரி அம்மா” என்றவன், ஆமா முத்துமாலையின் அம்மா என்ன ஆனாள்? இருக்காளா, போய்ச் சேர்ந்திட்டாளா?” என்று விசாரித்தான்.

அம்மாள் பெருமூச்சு விட்டாள். “வடிவு ஐயாவிடம் போய்ச் சேர்ந்து எத்தனையோ வருசமாச்சு. அவ பாவம் என்ன சுகத்தைக் கண்டா? பாவி நான் பொண்ணாப் பிறந்து புண்ணா உலையிதேனேன்னு அவ புலம்பாத நாள் கிடையாது. மாப்பிள்ளையாலும் அவளுக்கு சந்தோஷம் கிடைக்கலே, மகனாலேயும் நிம்மதி கிடைக்கலே. மகன் கிட்டே உசிரையே வச்சிருந்தா பாவி மட்டை. அவனுக்கு தெருவிலே, மூலை முடுக்கிலே ஏதாவது ஆபத்து நேர்ந்திடப்படாதேன்னு அவன் பின்னாலேயே நிழல் மாதிரிப் போவா. அவன் குடிச்சுப்போட்டு, வம்புச் சண்டையிலே மாட்டிக்கிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/27&oldid=1138967" இலிருந்து மீள்விக்கப்பட்டது