பக்கம்:இருட்டு ராஜா.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 தங்கராசு வடக்கேயிருந்து வந்திருக்கிறான் என்று அறிந்த தும் அநேகர் அவனைப் பார்த்துப்போவதற்காக வந்தார் கள். அவனும் சொந்தக்காரர்கள், பெரியவர்களை அவர வர் வீட்டில் போய் பார்த்துவிட்டு வந்தான். யார் வந்து பேசினாலும், அல்லது எவரோடு அவன் பேசினாலும் பேச்சோடு, பேச்சாக முத்துமாலை விஷய மும் தலை தூக்கிவிடும். அவனைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். எப்படியிருந்தாலும், முத்துமாலை அந்த ஊராரின் பேச்சுக்கு முக்கியமான ஒரு பொருளாக வளர்ந்திருந்ததை தங்கராசு புரிந்து கொண் | ff : , -அவன் நல்லவன்தான். குடிதான் அவனைக் கெடுத் துப் போட்டுது. -குடிக்காத நேரங்களிலே முத்துமாலை ரொம்ப ஒழுங்காக நடந்து கொள்வான். -குடித்தாலும்தான் என்ன தப் புத் தண்டாவுக்கு போகமாட்டான். -குடித்துவிட்டு ராத்திரி நேரங்களிலே கூச்சல் போட் டுக்கிட்டுத் திரிகிறான் என்கிறதைத் தவிர, அவனாலே மற்றபடி எந்தவிதமான தொந்தரவும் கிடையாது. ஆரம்பத்திலே கொஞ்சம் ஒவராப் போனான். அரி வாளை வச்சுக்கிட்டு எல்லாரையும் மிரட்டினன். தன்னைப் பத்தி பயங்கரமான ஒரு அபிப்பிராயம் உண்டாக்குதற