பக்கம்:இருட்டு ராஜா.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 33 இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற தங்கராசு முத்து மாலையின் போக்கை எண்ணி வியந்தான். முத்துமாலை எதற்கும் துணிந்தவன் என்று ஒருவர் சொன்னார். ஒரு தடவை சிலபேர் ஜாலியாகப் பந்தயம் பேசிப் பொழுது போக்கினார்கள். அதைச் செய்வையா இதை செய்து போடு பார்ப்போம் என்று பேசினார்கள். ஒரு வன் சொன்னான். அமாவாசை ராத்திரி சுடுகாட்டுக்குப் போயி, அங்கே நிக்கிற ஆலமரத்திலே ஆணி அடிச்சிட்டு வந்திரனும். அப்படி அடிக்கிறவனுக்கு நான் பத்து ரூபா தரத் தயார்.’ யாரும் துணிய மாட்டார்கள் என்ற எண்ணம் அவனுக்கு. பகல் வேளையிலேயே சும்மா அந்தப் பக்கம் போக அஞ்சுவார்கள். ஆலமரத்தில் பேய் இருக்கு, சுடு காட்டு முனியன், பொல்லாதவன் ஒரே போடாப் போட் டிடுவான் என்றெல்லாம் நம்பினார்கள். சங்கிலிக்கறுப்பு குடியிருக்கிறது.கொஞ்சம் பயந்தாலே லபக்குனு புடிச்சுக் கிடும், வீட்டிலே வந்து படுத்தால் அவ்வளவு தான். ஆள் குளோஸ் என்றும் சொல்லிக் கொள்வார்கள். இந்நிலை யில் அமாவாசை ராத்திரி எவன் போக முன் வருவான்? அனைவரும் சாக்குப் போக்குச் சொன்னார்கள். ஒரு வன், முத்துமாலை, நீ பெரிய சூரன்னு சொல்றாங்களே? நீ இதைச் செய்வியா? என்று சீண்டினான். "பந்தயப் பணத்தை கொடுத்திரனும், ஏமாற்றப் படாது' என்றான் முத்துமாலை. "நீ இதை செய்திட்டா, நான் என் மீசையை எடுத் திருவேன்' என்றான் அவனைச் சீண்டியவன். "உனக்கு மீசை இருந்தாலும் ஒண்னுதான், இல் லாட்டியும் ஒண்ணுதான். சுப்பய்யா சொன்ன பத்து ரூபா