பக்கம்:இருட்டு ராஜா.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 0 இருட்டு ராஜா யோட, நீயும் அஞ்சு ரூபா தருவியா?’ என்று முத்து மாலை கேட்டான். . "ஓ, ரெடியா!' என்றான் மற்றவன். அமாவாசை இரவு.முத்துமாலையின் பேமஸ்’பாட்டு கோட்டைக்கொத்தளம் மீதிலேறி தொடர்ந்து ஒலித்தது சுடுகாட்டு ரோடில் கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்தப் பாட்டை பாடியவாறே அவன்சுடுகாட்டுக்குப் போனான்.குறிப்பிட்ட ஆலமரத்தில் பெரிய ஆணி ஒன்றை நிதானமாக அறைந்தான். பாடிக்கொண்டே திரும் பினான். மறுநாள், சம்பந்தப்பட்டவர்கள் கும்பலாய் போய் பார்த்தார்கள். ஆணி அழுத்தமாக அடிக்கப்பட்டிருந்தது. அனைவரும் ஆச்சர்யத்தோடும், ஒருவித மதிப்போடும், முத்துமாலையைப் பாராட்டினார்கள். முதலில் பந்தயம் கூறியவன் மறு பேச்சுப் பேசாமல் பத்து ரூபாயை எடுத்து முத்துமாலையிடம் கொடுத்து விட்டான். எடக்குப் பேசியவன் பின்வாங்கினான். அதுதான் அண்ணாச்சி கொடுத்திட்டாகளே. அவாள்தானே பந்தயத் துக்குக் கூப்பிட்டாக' என்றான். -

ஏ மீசை! நீ மீசையை எடுத்திடுவேன்னு சொன்னே உன் மீசை எனக்கு வேண்டாம், அஞ்சு ரூபா தருவி யான்னு கேட்டேன். நீயும் மாலை அதட்டினான்.

“கந்தா, கொடுத்திருடே' என்று மற்றவர்களும் சொன்னார்கள். சரீன்னியே என்று முத்து