பக்கம்:இருட்டு ராஜா.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வல்லிக்கண்ணன் 35

 கந்தன் மழுப்பினான். பணம் கொடுக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை என்று தெரிந்தது முத்துமாலையா சும்மா விடுவான்? அவன் மீசையைப் பிடித்து ஒரு சுண்டு சுண்டினான், ஐயோ அம்மா’ என்று வேதனையினால் அலறினான் கந்தன். மேலும் இழுத்துச் சுண்டினான் முத்துமாலை. சில ரோமங்கள் அவன் கையோடு வந்தன.

  • நீ ரூபா தரத் தயாராயில்லே. நீ சொன்னபடியே மீசையை எடுத்திரலாம். நானே அதை எடுக்கிறேன். என்று மறுபடியும் வேகமாய் பலமாகப் பிடித்து இழுத் தான் முத்துமாலை.

கந்தன் வலி பொறுக்கமாட்டாமல் கத்தினான். விட்டிரு, விட்டிரு, முத்துமாலை. ரூபாவை வாங்கிக்கோ’ என்று கெஞ்சினான். ஐந்து ரூபாயைக் கொடுக்கவும் செய்தான். "இதை ஒழுங்கா முதல்வியே தந்திருக்கலாமில்லே?" என்று சிரித்தான் முத்துமாலை. சொன்னால் சொன்ன படி நடக்கணும். வார்த்தை மாறப்படாது. என்னை ஏமாத்தணுமின்னு நினைச்சா, நான் பொல்லாதவனா யிடுவேன். முத்துமாலை நல்லவனுக்கு நல்லவன், பொல்லாதவனுக்குப் பொல்லாதவன், ஆமா!' என்றான்' இது போல் சிறு சிறு விஷயங்கள் பல தங்கராசுவின் காதுகளில் விழுந்தன. முத்துமாலை தனக்கு என்று சில கொள்கைகள் வச்சிருக்கான் போலிருக்கு என்று அவன் எண்ணிக்கொண்டான்.