பக்கம்:இருட்டு ராஜா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

முத்துமாலையோடு பேசிய இரவுக்குப் பிறகு ஒவ்வொரு நாள் ராத்திரியும் தங்கராசு திண்ணையிலேயே வெகு நேரம் வரை தங்கலானான்.

“ராத்திரி ஏழு மணிக்கும் ஏழரை மணிக்கும் கதவை அடைச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளே முடங்கி விடுகிறது இந்த ஊர்க்காரங்களுக்கு உகந்த பழக்கமாக இருக்கலாம். எனக்கு அது ஒத்து வராது ராத்திரி பத்து மணி பத்தரை மணி என்று படுத்தே பழகிட்டேன்” என்று அவன் அம்மாவிடம் கூறினான்.

“இங்கே இருக்கிறவங்க நாங்க. ராத்திரி வேளையிலே என்னத்தைப்பண்ணப் போறோம்? எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்தே இருக்க முடியும்? குறுக்கு வலிக்கிறது தான் கண்ட பலன். படுத்துக் கிடந்தா கண்ணை மூடிக்கிட்டு இருந்தால், தூக்கம் வாறப்போ வந்திட்டுப் போகுது. இதுக்கு காசை கேட்குதா பணத்தைக் கேட்குதா !” என்று அவனுடைய அம்மா பார்வதி சொன்னாள்.

“உன் செளகரியப்படி செய்யி. ஆனா முத்துமாலை தெருவோடு வந்தால் அவன் வழிக்குப் போகாதே” என்றும் எச்சரித்து வைத்தாள்.

தங்கராக விளக்கை எரியவிட்டுக் கொண்டு ஏதாவது புத்தகம் அல்லது பத்திரிகையை வைத்துக்கொண்டு திண்ணையில் ஈஸிசேரில் சாய்ந்திருப்பதை வழக்கமாக்கினான். பத்தரை மணிக்கு வீட்டுக்குள் போய் படுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/38&oldid=1138987" இலிருந்து மீள்விக்கப்பட்டது