பக்கம்:இருட்டு ராஜா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40இருட்டு ராஜா

 வசாங்களே, அந்த வேலை. பத்திரங்களப் பார்த்து எழுதிக் கொண்டே இருக்கிற கிளார்க்கு வேலை செய்யும் மிஷின் மனிசனாக மாறியிருந்தான்.”

“ஒளிமுத்துன்னு ஒருத்தன். சுமாராத்தான் படிப்பான். விட்டிலே வசதியும் கிடையாது. அப்பன் ஏதோ வித்து வியாபாரம் பண்ணி, தெருத்தெருவாகக் கூவி விக்கற வேலை பிழைப்பு நடத்துறவன். உபகாரச் சம்பளத்திலே படிச்சான் பையன். அவன் காலேஜுக்குப் போக மாட்டான்லு வாத்திகள்ளாம் சொன்னாங்க. ஆனா, அவன் பி.ஏ. படிச்சிட்டு ஏதோ ஒரு ஆபீசராவந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு அலைய முடிஞ்சிருக்கு! இதுக்கு என்ன சொல்றே?”

“பழனியப்பன்னு ஒரு நோஞ்சான் பையன். புல் தடுக்கி சாண்டோ, காத்தடிச்சாலே கீழே விழுற மாதிரி இருந்தான். அந்தக் காலத்திலே. ஆனா பையன், சிவப்பா அழகா இருப்பான். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாலே அவனைப் பார்த்தேன். ஏயம்மா! எவ்வளவு வாட்ட சாட்டமா ஜம்னு இருந்தான்கிறே! சின்னப்பயலா, பயந்தாங்குளியா இருந்தவன் போலீஸ் இன்ஸ்பெக்டராகி மோட்டார் பைக்கிலே ஜாம் ஜாம்னு எடுப்பா மிடுக்கா அலைறான். பழைய பழனியப்பனா இவன்னு என்னாலே நம்பவே முடியலே.”

“இப்படி எத்தனையோ! இதை எல்லாம் நான் யோசிச்சுப் பார்ப்பேன். எல்லாமே வேடிக்கையாத் தோணும் எனக்கு. வாழ்க்கை மனுசங்களோடு விளையாடுது—மனுசங்களை வச்சு விளையாடுதுன்னு நினைக்கத் தோணும். சரி, நாமும் வாழ்க்கையோடு—வாழ்க்கையை வச்சு-விளையாட வேண்டியதுதான். வாழ்க்கையிலே சந்தோசமா இருக்கிறதுதான் முக்கியம்னு முடிவுக்கு வத்தேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/42&oldid=1138999" இலிருந்து மீள்விக்கப்பட்டது