பக்கம்:இருட்டு ராஜா.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 0 4: முத்துமாலை பேசப் பேச, தங்கராசுவின் மனம் வியம் பினால் அலைமோதியது. ஆளுக்குள்ள்ே ஆளு எத் தனையோ ஆளு என்பாக. இந்த முத்துமாலைக்குள்ளும் அதிசயமான ஆளுகள் இருந்து அவனை ஆட்டிப் படைக்குது என்று நினைத்தான். . சட்டென்று முத்துமாலை கேட்ட கேள்வியை அவன் எதிர் பார்க்கவில்லை. . - "ஆமா, தங்கராசு, நீ இப்படி பழையவனுக, பழ கினவங்களைப்பத்தி எண்ணுவியா? என்னைப்பத்தி எப்டி: வாவது நினைச்சது உண்டா? 'நினைக்காம என்ன!” என்று மழுப்பலாகச் சொன்' னான் தங்கராக. - அடுத்த கேள்வியும் அவனைத் திகைக்க வைத்தது, 'திரிபுரசுந்தரி பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா, ராசு? என்று கேட்டான் முத்துமாலை. "திரிபுரசுந்தரியா? சட்டென்று அவனால் நினைவு கூற இயலவில்லை. அவதான், நம்ம த்ரீ ஸைட் பியூட்டி! இந்த ஊர் தான்...' இப்போது தங்கராசுவுக்கு வெளிச்சமாயிற்று. திரீ புரசுந்தரியை "த்ரீ ஸைடு பியூட்டி' என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள் பையன்கள். முன்னழகு-டு லைடு ப்யூட்டி தானே? மூன்றாவது ஸைடு ஏது?’ என்று ஒருவன். எடக்காகக் கேட்டான் ஒரு சமயம். பக்கத்தோற்றம்பக்கவாட்டிலே தென்படும் அழகு-ப்ரொஃபைல் ப்யூட்டிஅதுதான் தர்டு லைடு' என்று தங்கராசு பதில் கூறவும், பிரமாதமான அப்ளாஸ் கிடைத்தது. அது நினைவுக்கு, வந்தது. சிரித்தான். - ... - t