பக்கம்:இருட்டு ராஜா.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 0 இருட்டு ராஜா "தெரியாது முத்துமாலை. நான் இந்த ஊருக்கு ரொம்ப வருஷமா வராமலே இருந்திட்டேனா? எனக்கு எதுவுமே தெரியாமப் போச்சு ஆமா, அவளுக்கென்ன?” என்று கேட்டான். - "ஒண்னுமில்லே. அவளுக்குக் கல்யாணமாச்சு. புருஷ னுக்கு ஏதோ பிசினஸ்னு சொன்னாங்க. வடக்கே எங்கேயோதான் இருப்பதாகக் கேள்வி. அதுதான் நீ எங்காவது பாத்திருப்பியோ, தகவல் ஏதாவது தெரியு மோன்னு கேட்டேன்...சரி, நான் வாறேன்” என்று கூறி முத்துமாலை நகர்ந்துவிட்டான், -யாருடைய மனம் எப்படி வேலை செய்யும், எ ப் போது எப்படி நடந்துகொள்ளும்னு கண்டுகொள்ளவே முடியறதில்லே. மனித மனம்கிறது மர்மமான, அற்புத மான விஷயம்தான். இந்த முத்துமாலையை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யம்தான் அதிகமாகுது! தங்கராசுவின் மனம் கிளர்ச்சியுற்றிருந்தது அன்றிரவு அவன் சரியாகத் துரங்க முடியவில்லை. 6 தங்கராசு திரிபுரசுந்தரியைப் பற்றி அதிகம் நினைத் தான். அவன் துளக்கம் கெட்டுப் போனதுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அந்நாட்களில் அவள் வகுப்பு:பெண்களின் தலைவி மாதிரி செயல்பட்டாள். அவளுக்குப் பதின் மூன்று