பக்கம்:இருட்டு ராஜா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46இருட்டு ராஜா

 இப்படி சல்லிப் பயல்னு பட்டம் வாங்குவியா?” என்று உபதேசித்தார்.

தங்கராசுவின் அப்பா, பையன் ஊரோடு இருந்தால் யோக்கியமா வளரமாட்டான். படிப்பையும் கெடுத்து, தானும் கெட்டுப் போவான் என்று எண்ணி, அவனைப் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்த்து விட்டார்.

அவன் காலேஜ் படிக்கிற காலத்தில் அவர் செத்துப் போனார்.

தங்கராசு பிறகு இரண்டு மூன்று தடவைகள் திரிபுரத்தைப் பார்த்தது உண்டு. அழகான பெண் என்று எண்ணியதுண்டு.

பின்னர் அவளைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டவில்லை. அவளும் பருவம் எய்தி வீட்டுக்குள் ஒடுங்கி போனாள்.

“உரிய காலத்தில் அவளுக்கும் கல்யாணம் நடத்திருக்கும்” என்று எண்ணிக் கொண்டான் தங்கராசு. “முத்துமாலை அவளைப்பற்றி திடீர்னு என்னிடம் விசாரிப்பானேன்?” என்று அவன் மனம் அரித்தது.

“அதுதான் காரணம் சொன்னானே; மெய்யாலுமே அதுதான் விஷயமாயிருக்கும்” என்றும் அவன் மனமே சமாதானமும் கூறிக் கொண்டது.

இருந்தாலும், மறுநாள் அம்மாவிடம் கேட்டான்: “முத்துமாலை நேத்து ராத்திரி அவனோட அத்தை மகள் திரிபுரத்தைப் பற்றி என்கிட்டே கேட்டான். வடக்கே எங்கேயோ இருக்காளாமே தெரியுமா,எப்பவாவது பாத்தியான்னு கேட்டான். அவ எங்கே இருக்கா, மெட்ராசிலேயா? எனக்குத் தெரியாதே!”

பார்வதிஅம்மாள், அவளது இயல்பின்படி பேசினாள்: “என்ன இருந்தாலும் அத்தை மக்கள் அம்மாள் மக்கள் இல்லேன்னு போயிடுமா? ரத்தபாசம் விட்டிடுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/48&oldid=1139014" இலிருந்து மீள்விக்கப்பட்டது