பக்கம்:இருட்டு ராஜா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்47

 அதிலும், அவன் திரிபுரத்தைக் கட்டிக்கிடணும்னு ஆசையா யிருந்தான். வடிவும் பூமியாபிள்ளை கிட்டே கேட்கத்தான் செஞ்சா. பொண்ணு கொடுக்கும்படி. திரிபுரத்தோட அப்பா பேரு பூமிநாதபிள்ளை, பூமியா பிள்ளைன்னு சொல்லுவோம். அவரு பூமிக்கும் மானத்துக்குமாக் குதிச்சாரு உன்மகனுக்காவது நானாவது என் மகளையாவது கொடுக்கிறதாவது அவன் வெறும்பயலாக்கும். சல்லிப் பயலாக்கும், உருப்படாத பயலாக்கும், அப்படியாக்கும் இப்படியாக்கும்னு கூப்பாடு போட்டாரு. உள்ளுர் சம்பந்தமே கூடாது . இந்தச் சில்லாவே கூடாதுன்னு துரா தொலையிலே மாப்பிள்ளை தேடிப் பிடிச்சாரு. மாப்பிள்ளைக்கு சொந்த ஊரு மதுரைப் பக்கம் எங்கேயோன்னு சொல்லிக்கிட்டாக. அவனுக்கு பம்பாயிலே வேலைன்னோ; இல்லை, கல்கத்தாவிலே இருக்கான்னோ சொன்னாக, மொத்தத்திலே, வடக்கே எங்கேயோ இருக்கான். அதுதான் தெரியுது!”

“திரிபுரம் அப்புறம் இந்த ஊருக்கே வரலியா?”

“வராம என்ன! வந்தா வந்தா. அவ அப்பா செத்த போது ஒரு சமயம் வந்தா. பிறகு ரெண்டு மூணு தடவை வந்தா...”

“அவ ஒண்ணும் சொல்லலையா?”

“அவ என்னத்தைச் சொல்லுவா! அவளுக்கு வந்து இறங்கியிருக்கிற ராங்கியும் கெருவமும், யாருகிட்ட கல கலப்பா அவபேசினா? ஏதோ, நல்லபடியா இருந்தால் சரிதான்” என்றாள் பெரியவள்.

மேலும் தொடர்ந்தாள்:

“திரிபுரம் தனக்குக் கிடைக்காமப் போயிட்டாளேங்கிற ஏமாற்றமும் வருத்தமும்தான் முத்துமாலையை ஒரே அடியா மாத்திப் போட்டுதுன்னு நான் சொல்லு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/49&oldid=1139015" இலிருந்து மீள்விக்கப்பட்டது