பக்கம்:இருட்டு ராஜா.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 இருட்டு ராஜா வேன். நம்ம அத்தை மக நமக்குத்தான்னு அவன் நம்பிக்கையோடு இருந்தான். அவ மேலே ஆசை வச்சிருந் தான். அந்த நம்பிக்கையிலே மண்ணு விழுந்து, ஆசை முறிஞ்சு போனதும், அவனுக்கு விரக்திஏற்பட்டுப்போச்சு. மாமன் பூமியா பிள்ளையும், பெரியப்பன் பாபநாசம் பிள்ளையும் அவன் உருப்படமாட்டான், சல்லிப்பய, வீனப்பயல் என்று மந்திரம் மாதிரி உச்சரிச்சுக்கிட்டே இருந்தாங்களா? அது வேறே உள்ளுக்குள்ளே வேலை. செய்திருக்கும். திரிபுரத்துக்கு வேறே இடத்திலே கல்யாணமாகிப் போச்சு. இவனுக்கோ வேறே யாரும் பொண்ணு கொடுக்கத் தயாராயில்லை. சரி,இனிஒழுங்கா யோக்கியமா இருந்து என்னத்துக்கு; இவனுக முன்னா லேயே வீணப்பயலாவும் போக்கிரியாவும் நடமாடி இவங். களை ஆட்டம் காட்டலாமேன்னு அவன் வக்கிரிச்சுக் கிளம்பிட்டான். எனக்கு அப்படித்தான் பட்டுது' என்று அம்மா முடித்தாள். - : தங்கராக அவளை ஆமோதிக்கவும் இல்லை; அவள் எண்ணத்தை மறுத்துக் கூறவும் விரும்பவில்லை. "அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தால் என்ன? முத்துமாலை வித்தியாசப்பட்ட ஒருவனாக வளர்ந்து விட்டான். மற்றவங்களுக்கு மாறுபாடான முறையிலேயே நடந்துகொண்டு வருகிறான்' என்று அவன் நினைத்தான். 7 அன்று சாயங்காலம். தங்கராசு வீட்டுக்கு ஒருத்தி வந்தாள். தூக்குச் சட்டியும் கையுமாக. ஆச்சி, மகன் வந்திருக்காளே, வடை பஜ்ஜி எதுவும் வேனுமா" என்று கேட்டுக் கொண்டு.