பக்கம்:இருட்டு ராஜா.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 0 49 'வா, தனபாக்கியம்: இருக்கிறதை கொடுத்திட்டுப் போயேன்!” என்றாள் பார்வதி அம்மாள். வந்தவள் சட்டியைத் திறந்து, வடைகளும் பஜ்ஜி களும், கொடுத்துவிட்டுக் காசுகள் வாங்கிப் போனாள். "தினம்கொண்டாந்து கொடுத்திட்டு போபாக்கியம்' என்று அம்மா வழி அனுப்பினாள். அவள் போனதும், "இது யாரு, இந்த ஊரிலே புதுசா வியாபாரம் பண்ண வந்திருக்காளா?' என்று தங்கராசு கேட்டான். "இவதான் முத்துமாலை கூட இருக்கறவ' என்று அம்மா சொன்னதும் அவன் திகைப்படைந்தான். அன்றொரு நாள் அம்மா, கெட்டலைந்த கழுதைஎவளோ என்று சொன்னாளே, அது இவள்தானா என அதிசயித்தது அவன் மனம். இவள் ஒண்னும் மோசமாத் தெரியலியே என்றும் நினைத்தது. அவள் சராசரிக் குடும்பத்தில் வளர்ந்து வாழ்கிற சாதாரணப் பெண் போல் தான் இருந்தாள். பகட்டோ, மினுக்கோ எதுவும் அவளிடம் இல்லை. நடையிலோ, பார்வையிலோகூட சந்தேகத்துக்குரிய குறிகள் ஒன்றும் தென்படவில்லை. பின்னே அம்மா அப்படிச் சொன் னாளே. 'இவ பேரு தனபாக்கியமா? எந்த ஊர்க்காரியோ?” என்று சாதாரணமாகக் கேட்பவன் போல் கேட்டு வைத்தான். - "எந்த ஊரோ கேடோ! இது மாதிரிக் கழுதைகளுக் கெல்லாம் எல்லா ஊரும் சொந்த ஊர் தான். திடீர்னு ஒரு நாள் முத்து மாலை இவளை கூட்டிக்கிட்டு வந்தான். ரயிலடியிலே பார்த்தேன்னு சொன்னான். அதிலேருந்து அவ இங்கே தான் இருக்கிறா. நல்லபடியா இருக்கா. தப்புத்தண்டாவா நடந்துக்கிட்டா முத்துமாலை