பக்கம்:இருட்டு ராஜா.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 இருட்டு ராஜா விட்டா வச்சிருப்பான்? வெட்டிப் பொங்கவிட்டுருவானே பாவி. அந்தப் பயமும் இவளுக்கு இருக்கும். இதிலிருந்து பாரு இடிவிழுவான் காரியத்தையின்னு, கூட இருந்தே அவன் குணத்தை, போக்கை எல்லாம் தான் கண்டுக் கிட்டிருப்பாளா சும்மாவா!' என்றாள் அம்மா. "அவன் தான் வடை பஜ்ஜி வியாபாரம் பண்ணும் படி சொன்னானாமா?” "இல்லே இல்லே. அவன் இவளை அருமையாத்தான் வச்சிருக்கான். வரவர, அவன் நிலைமை மோசமாயிட்டுது. வரவு இல்லாமெ தாம் துாம்னு செலவு செய்தா,இருக்கிற சொத்துதான் எத்தனை நாளைக்கு வகும்? இருந்த சொத்துப் பூராவையும் வித்துத் தின்னாச்சு. ஒரு வீடு இருக்கு. அது மேலேயும் கடன் வாங்கியாச்சு, ஒரு நாள் வீட்டுத் திண்ணையிலேயே பலகாரக்கடை, டீ காப்பி யோடு ஆரம்பிச்சான். இவ தான் ஆலோசனை சொல்லி யிருப்பா. இவ பலகாரமெல்லாம் சுசிருசியா நல்லாக் செய்வா...' "வடை நல்லாத்தானிருக்கு. ஆமவடை மொறு மொலுன்னு ருசியா இருக்கு. உளுந்த வடை மெத்து மெத்துன்னு பூப்போலே இருக்கு. அநேகமாக வீடுகளிலே செய்கிற உளுந்து வடை மெதுவாகவே அமைக்கிற தில்லே. கல்லு மாதிரித்தான் இருக்கும். இது ரொம்ப மெதுவாயிருக்கு...' - "எல்லாம் அறைக்கிறதிலே இருக்கு. சில பேரு கைக்கே பலகாரங்களிலே தனி ருசியும் வாகும் ஏற்பட்டி டும்.தனபாக்கியம் கை அப்படிப்பட்டகை என்று அம்மா தாராளமாக ஸர்டிபிகேட் வழங்கினாள். பரவால்லே, அம்மாவுக்கு இவ பேரிலே வெறுப்பு இல்லை. வெறுப்பு இருந்தால் அவளை நடையேற விட