பக்கம்:இருட்டு ராஜா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தான் அலைஞ்சான்’. அதற்கென தனக்குத் தானே அவன் வகுத்துக் கொண்ட தர்மங்களும், கையாண்ட போக்குகளும் விசித்திரமானதாகத் தோன்றலாம்.

இருட்டில், மறைவாக நிகழ்கிற அக்கிரமங்கள், அநியாயச் செயல்களில் தலையிட்டு, நீதி வழங்க வேண்டியது-தண்டனை கொடுப்பது அல்லது சமரசம் செய்து வைப்பது—தனது பொறுப்பு என்று நம்பியவன் போல் ஊர் விவகாரங்களில் குறுக்கிட்டு ஆக்கினைகள் செய்வதில் உற்சாகமாக ஈடுபட்டான் அவன்.

முத்துமாலை எந்தக் காலத்து மனிதனோ அல்ல. எனது சமகால மனிதன் அவன். அவன் செயலில் அமானுஷ்யமோ, அதீதமோ எதுவும் இல்லை.

அவன் நிகழ்த்தியதாக விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் கதைச்சுவைக்காக தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றனவே தவிர, எனது ‘அனுபவ ஞானத்தில்’ வெவ்வேறு கால கட்டங்களைச் சேர்ந்தவை அவை.

முத்துமாலையின் விசிலடிப்பும் அவனது செயல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவை—வசீகரிக்கக் கூடியவை.

‘இருட்டு ராஜா’போன்ற நல்ல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிடும் நண்பர் ராமலிங்கம் அவர்களின் கவனிப்பில் நர்மதா வெளியீடு ஆகப் பிரசுரம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்.

24–12–’85

—வல்லிக்கண்ணன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/6&oldid=1138629" இலிருந்து மீள்விக்கப்பட்டது