பக்கம்:இருட்டு ராஜா.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் D. 6懿 அவள் அநாவசியமாகப் பயப்படுகிறாள், வீணாக பயப்படுத்துக் றாள்என்று அவன் எண்ணினான். ஆயினும்: விளக்கை அனைத்து விட்டுப் படுத்தான். அவ்வேளையில் தெற்குத் தெரு மூலையில் பரபரப் பான ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்திருந்தது. . அந்தத் தெருவின் கடைசி வீட்டில் கம்பி அளிபோடப் பட்டிருந்த திண்ணையில் வீட்டுக்காரி படுத்திருந்தாள். எவனோ திருடன் புகுந்து, அவள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியிருக்கிறான். விழித்துக் கொண்ட அவள், ஐயோ சங்கிலி போச்சே... திருடன், திருடன்...ஐயோ சங்கிலி திருடன்” என்று. அலறலானாள். . . பக்கத்து வீடுகளில் உள்ள ஆண்கள் எழுந்து வந்தார் கள். திருடன் வைக்கோல் படப்புகள் இருந்த தோட்டத் தினுள் குதித்து ஓடினான். ஏய், விடாதே-பிடி’ என்று. கத்திக் கொண்டு மற்றவர்கள் தெருவிலேயே நின்றார்கள். அவர்களுக்குப் பயம் கூச்சலைக் கேட்டு அந்தப் பக்கமாக விரைந்து வந். தான் முத்துமாலை. வழக்கமான சீட்டியை தொடர்ந்து அடித்துக்கொண்டு, அவன் சகாக்களும் ஓடி வந்தார்கள். தோட்டத்துக்குள் திருடன் குதித்து ஓடினான் என்று. தெரித்ததும். முத்துமாலையும் அவன் ஆட்களும் உள்ளே பாய்ந்தார்கள். ஒருவன் : மார்ச் லைட்' வைத்திருந்தான். அதனுடைய ஒளி தாவித்தாவிப் பாய்ந்தது. ஒரு படப்பின் பின்னால் பதுங்கி நின்ற திருடன் ஒடத் தொடங்கினான். தோட்டத்துக்கு அப்பால் பள்ள மான வயல் பரப்புகள் தான். வயல்களில் பயிர் கிடையாது. அறுவடை முடிந்து: காய்ந்து கிடந்தது. ஒடுவதற்கு வசதி தான்.