பக்கம்:இருட்டு ராஜா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்63

 மற்ற ஆட்களும் வந்து சேர்ந்தார்கள். திருடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு தெருவை அடைந்தார்கள். வழி நெடுக அவனுக்குச் சரியான பூசைக்காப்பு கிடைத்தது.

“அப்பா செயிலுக்குப் போயிட்டு வந்த சூரப்புலியே எந்த இடத்திலே வாலாட்டனும்னு உனக்கு யாரும் கத்துக் குடுக்கலியாக்கும். இதை மறக்காதே. இந்தா என்று சொல்லி முத்துமாலை கையை மடக்கிக் கொண்டு முஷ்டியால் அவன் முதுகில் கும்மென்று ஒரு குத்து விட்டான்.

“அம்மா தான் செத்தேன்!” என்று திருட்டுப் பயல் அப்படியே கீழே உட்கார்ந்து விட்டான்.

வீட்டுக்கார ஐயாவும் அம்மாளும் நின்றார்கள். “ஐயா இந்தாங்க! உங்க நகை. திருடனைப் போலீசில் ஒப்படைக்கிறதோ அல்லது அடிச்சுப் பத்தறதோ உங்க இஷ்டம்” என்று அவரிடம் முத்துமாலை தெரிவித்தான்.

“நம்ம பொருளு நம்ம கைக்கு வந்துட்டுது. அந்தப் பயலுக்கு அரிவாள் வெட்டும், பட்ட அடியும் குத்தும் இந்தச் சென்மத்துக்கு போதும்னு தோணுது. கேசு கீசுன்னு போனாலும், வீண்தொரட்டு” என்று இழுத்தார், ஐயர்.

அதுவும் சரிதான். இந்தப் பயலை ராத்திரிக்கு இந்தத் தென்னமரத்தோடு சேர்த்துக் கட்டி வச்சிருப்போம். பல பலன்னு விடியற் நேரத்துக்கு அவுத்துப் பத்திருவோம்” என்று ஒருவர் யோசனை சொன்னார்.

அவ்வாறே செயல்படுத்தப்பட்டது.

“வேய் செயிலுக்குப் போயிட்டு வந்த குரப்புலியே! இந்த ஊர்பக்கம் இனி அடி எடுத்து வச்சே, அவ்வளவு தான். அடுத்ததடவை என் அரிவாள் உன் காலை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/65&oldid=1139123" இலிருந்து மீள்விக்கப்பட்டது