பக்கம்:இருட்டு ராஜா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64இருட்டு ராஜா

 வராது. உன் கழுத்தைத்தான் பதம் பார்க்கும். ஞாபகம் வச்சுக்கோ” என்று முத்துமாலை அறிவுறுத்தினான். பின் தன்வழியே போனான்.

பலர் மரத்தைச் சுற்றிக் காவல் இருந்தார்கள். அதி காலையில் அவிழ்த்து விட்டு, கொசுறு ஆகப் பல அடிகள் கொடுத்து, ஊருக்கு வெளியே அவனை அனுப்பி வைத்தார்கள்.

அவன் நொண்டிக் கொண்டே போய்ச் சேர்ந்தான்

இந்த விவரம் மறுநாள் தங்கராசுக்குத் தெரிய வந்ததும், “அடடா நானும் வந்து பார்க்காமல் போனேனே!” என்று வருத்தப்பட்டான்.


9

அம்மன் கோயில் கொடை வந்தது.

ஊர் பொதுத் திருவிழா அது. எல்லோரும் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள்.

முத்துமாலை சில வருடங்கள் வரிப்பணம் கொடுக்க மறுத்து வந்தான். அவனுடைய அம்மா இறந்த தருணத்தில் ஊரார் அவனுக்குப் பாடம் கற்பித்து விட்டதிலிருந்து, அவனும் ஒழுங்காக பணம் கட்டலானான். அத்துடன் விழாக் குதூகலத்தில் அவனும் ஆர்வத்தோடு கலந்து மகிழ்ந்தான்; மற்றவர்களுக்கம் மகிழ்ச்சி அளிக்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/66&oldid=1143525" இலிருந்து மீள்விக்கப்பட்டது