பக்கம்:இருட்டு ராஜா.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 0 இருட்டு ராஜா 'காளியாத்தாதான் இவனுகளைக் கேட்கணும்' என்று முனு முனுப்பார்கள். . ஒரு தடவை இப்படிச் சாபம் கொடுப்பது போல் ஒரு கடைக்காரன் சொன்னது முத்துமாலை காதுகளில் விழுந்து விட்டது. கேட்டு அவன் கோபிக்கவில்லை.

திருவிழாக் கடையிலே நீங்க வச்சதுதானே வரிசை யாக இருக்கு. அநியாயவிலை சொல்லி ஊர்க்காரங்களை நீங்க கொள்ளையடிக்கிறீங்க. உங்கக் கிட்ட வசூல் பண்ணும்படி காளி அம்மா தான் எங்களை ஏவியிருக் கிறா. அவ எங்களை கேட்கிறபோது கேட்டு கிடட்டும். அப்படிக் கேட்கிறதுக்கு முன் வந்தா, முதல்லே ஆகிய உங்களைத்தான் தட்டிக் கேட்பாள்” என்று: லெக்சரடித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

இந்த வருஷம் கொடை கோலாகாலமாக நடந்து கொண்டிருந்தது அம்மன் சப்பரம் எழுந்திருந்து ஆவ. தற்கு இரவில் வெகு நேரம் பிடிக்கும். அதுவரை ஜனங் கள் விழித்திருப்பதற்காகவும் மற்றும் திருவிழாக்கோலம் காட்டுவதற்காகவும் ஸ்பெஷல் நாதசுரம் நையாண்டி, மேளம், கரக ஆட்டம் எல்லாம் ஏற்பாடு செய்வது வழக் கம். வில்லுப் பாட்டும் நடைபெறும். கரகம் ஆடுவதற்கு இரண்டு பெண்கள் வந்திருந்தார் கள். கூட்டம் அவர்களைச் சுற்றிலும் வட்டமிட்டிருந்தது. ஆடு ஆடு' என்று ஒயாது கூச்சலிட்டு அவர்களை ஆடும் படி தூண்டிக்கொண்டேயிருந் தார்கள். தெருத்தெருவாக போய், முக்கிற்கு முக்கு நின்று, வெகுவாக ஆடிக் களைத்துப் போனார்கள் அவர்கள். இருப்பினும் ஒருசிலர் "ஏய் ஏன் நிக்கிறே? பணம் வாங்கலே நோட்டு நோட்டா? ஆடுங்கடி'என்று உத்திரவிட்டு அந்தப் பெண் களைக் கிண்டல் பண்ண லானார்கள். .