பக்கம்:இருட்டு ராஜா.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருட்டு ராஜா அவன் உதடுகளைக் குவித்து விரலை உபுயோகித்து வாயினால் எழுப்பிய சீட்டி ஒலி தெற்குத் தெரு மூலையில் எழுந்து, வெகு தூரத்துக்குப் பரவியது. சின்னச் சின்னத் தெருக்களை உடைய அந்தச் சிற் றுாரில், அந்தச் சீழ்க்கை ஒலி தெருவுக்குத் தெரு விதம் விதமான சலனங்களை உண்டாக்கியது. - -முத்துமாலைக்கு பொழுது விடிஞ்சிட்டுது: -இனிமே ராத்திரிப் பூரா அவன் ராச்சியம்தானே! -பாழறுவான் ஏன்தான் இந்தப் போக்குப் போறானோ! -பூச்சி வெட்டை யார் யாரையோ கடிக்குதுங் கிறாங்க. இந்த ராக்காடு வெட்டியை எதுவும் ஒண்னும் செய்யாது போலிருக்கு.