பக்கம்:இருட்டு ராஜா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68இருட்டு ராஜா


“முத்துமாலை, இங்கேயா இருக்கே? உன்னை எங்கே யெல்லாம் தேடினோம்!” என்றார்கள்.

“ஏன், என்ன விசயம்?” என்று கேட்டு சாவகாசமாக ஒரு பீடியைப் பற்றவைத்தான் அவன்.

“இந்த நாதசுரககாரன் ரொம்ப ரப்பா பேசுறான்.”

“அகம் பாவம் பிடிச்சி அலையிதான்”

“சரியான மண்டைக் கனம். ஆளைப் பார்த்தாலே தெரியலே!”

“பெரிய நாதசுரச் சக்கிரவர்த்தியின்னு நெனைப்பு அவனுக்கு அதனாலே தான் எடுத்தெறிந்து பேசு தான்.”

“பளபளக்கிற பட்டை மேலே போர்த்திக்கிட்டா, காதிலே வெள்ளைக் கடுக்கனும் கையிலே செயினும் போட்டுக் கிட்டா, நாதசுரத்திலே, தானே விலைக்கு வாங்கி ஒரு மெடலையும் தொங்க விட்டுக் கிட்டா, பெரிய சங்கீத வித்வான் ஆயிருவானோ இவன்!”

இவ்வாறு ஆள் ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.

“அமைதியாகச் சொல்லுங்கடே. என்ன நடந்தது. நாதசுரக்காரன் என்னமோ பேசிப்புட்டான்னு புரியுது? என்ன சொன்னான் அவன்? அவன் கிட்டே யாரு என்ன கேட்டா?” என்று நிதானமாகக் கேட்டான் முத்துமாலை.

அவர்கள் சளசளத்ததிலிருந்து அவன் இதைப் புரிந்து கொள்ள முடிந்தது—

அந்த நாதசுரக்காரன் மேல்மினுக்கி ஆசாமியாக, வெறும் காட்சி பொம்மை மாதிரி எத்திக்கிட்டு அலைகிறான். பேருக்குக் குழலை கையிலே வச்சுக்கிட்டு ஒய்யாரமாப் பாக்கிறது. தளுக்காகச் சிரிக்கிறது. ரெண்டு ஊது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/70&oldid=1139128" இலிருந்து மீள்விக்கப்பட்டது