பக்கம்:இருட்டு ராஜா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்73


முத்துமாலை சிரித்துக் கொண்டே அதைத் துாக்கினான். “நல்லாத் துாங்கிட்டே. அதுதான் சாமி வெளியே போனது உனக்குத் தெரியலே. எல்லாரும் சாமி கூடவே போயிட்டாங்க” என்று பேசியவாறே நடந்தான்.

நல்லவேளை குழந்தை அழுகையை நிறுத்தி விட்டது.

“உன் பேரு என்ன கண்ணு?” என்று செல்லக் குரலில் கேட்டான்.

“மங்கை...மங்கயக்கயிசி” என்று மழலைக் குரலில் அது பேசியதை அவன் ரசித்தான். அதன் பேச்சை மேலும் கேட்க ஆசைப்பட்டான்.

“அப்பா பேரென்ன?”

“அப்பா” என்று அழுத்தமாக அறிவித்தது குழந்தை.

“அம்மா பேரு அம்மாவா?”

“இல்லே. தியிபுயிசுந்தயி”

“தியிபுயிசுந்தயி-ரொம்பவும் புதுமையான பேராக இருக்குதே!” என்று சொல்லிச் சிரித்தான் அவன். குழந்தையும் அவனோடு சேர்ந்து சிரித்தது. “நல்ல மாமா” என்று கூறி அவன் முகத்தில் முகம் வைத்து முத்தமிட்டது.

முத்துமாலைக்குப் புல்லரித்தது. அதி இனிமையை ருசித்தது போல் சந்தோஷம் ஏற்பட்டது. உள்ளம் கிளுகிளுத்தது.

“தியிபுயிசுந்தயி மக மங்கயக்கயிசி சர்க்கரைக் கட்டி, பலாச்சுளை. மல்கோவா மாம்பழம்” என்று கொஞ்சி அதை முத்தமிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/75&oldid=1139350" இலிருந்து மீள்விக்கப்பட்டது