பக்கம்:இருட்டு ராஜா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76இருட்டு ராஜா

 “இந்த ஊருக்கு எப்ப வந்தே திரிபுரம்” என்று தனது பழைய கேள்வியைத் திரும்பபும் கேட்டான் அவன்.

“நேத்து வந்தேன்”

“எல்லோரும் சவுக்கியம் தானே?”

“ஊம்ம்”

“அவாள் வந்திருக்காளா?”

“அடுத்த வாரம் வருவாக...வீட்டுக்குப் போகலாமா, மங்கை சாமியைக் கும்பிட்டுப் போட்டு அப்படியே போவோம்”, என்று குழந்தையைப் பார்த்தாள் அவள்.

“சரி போங்க. நான் இந்தப் பக்கம் போறேன். புள்ளை பத்திரம், திரும்பவும் எங்காவது தனியாய் போயிறாமே” என்று சொல்லி அந்த இடத்திலேயே நின்று விட்டான் முத்துமாலை.

“நாளைக்கு வீட்டுக்கு வாங்களேன். பார்த்து எவ்வளவோ நாளாச்சு. வருவீகளா?” என்றாள் அவள்.

“உம். வாறேன் வாறேன்!”

“நாளைக்கு கண்டிப்பா வரணும். வாங்க அத்தான்” என்று அழைப்புக்கு அழுத்தம் கொடுத்தாள் திரிபுரம்.

“கண்டிப்பா வயணும்” என்று மொழிந்தது குழந்தை.

“சரி கண்ணு. அவசியம் வாறேன்” என்று சொல்லி விட்டு திரும்பவும் கோயிலை நோக்கி நடந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/78&oldid=1139360" இலிருந்து மீள்விக்கப்பட்டது