பக்கம்:இருட்டு ராஜா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்79

 “அம்மாவுக்குப் பிறகு இந்த வீடு; இங்கே இருக்கிற நிலம், எல்லாம்?”

“அதை எல்லாம் வித்திட வேண்டியதுதான், இந்த ஊரிலே என்னத்துக்கு வீடும் நிலமும்? அம்மா இருக்கப்போய்த்தான் இந்த ஊருக்கு வரவேண்டியிருக்கு அம்மாவுக்குப் பிறகு யாரு இங்கே வரப்போறா?” என்றாள். அவள்.

“ஏன், ஊரோடு இருக்கிற சொந்தக்காரங்களையும் பிடிக்கலையாக்கும்?”

பதில் பேசாது சிரித்த திரிபுரம் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, உள்ளே போனாள்.

இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தமோ என்று நினைத்தான் அவன்.

மங்கை அவனிடம் ஒட்டிக் கொண்டு சிரித்து விளையாடியது. அவனும் குழந்தையோடு விளையாடிய வாறே, “யாருக்குப் பிடிச்சாலும் பிடிக்காமப் போனாலும் உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு,இல்லையா?” என்றான்.

சிறிது நேரத்தில் திரிபுரம் காப்பி எடுத்து வந்தாள். மகளை காப்பி தயாரிக்கும்படிதான் ஏவியிருந்தாள். காப்பி டம்ளரை அவன் அருகில் வைத்துவிட்டு, “உம் சாப்பிடுங்க” என்றாள்.

“இப்ப எதுக்கு காப்பி?” என்றான். பிறகு எடுத்துக் குடித்தான்.

“காந்தி போட்டதா? நல்லாத்தான் போட்டிருக்கா?” என்று பாராட்டுரை வழங்கினான்.

“நீங்க உங்க போக்கு எதையும் மாத்திக்கிடலேன்னு தெரியுது. நிலத்தை எல்லாம் வித்துட்டிகளாமே? அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/81&oldid=1139395" இலிருந்து மீள்விக்கப்பட்டது