பக்கம்:இருட்டு ராஜா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84இருட்டு ராஜா

 அவன் குரலில் அலுப்பும் சலிப்பும் கசப்புடன் கலந்து வித்தன. “நேத்துப் பூரா எனக்கு மனசே சரியில்லாமப் போச்சு!”

“ஏன், என்ன விசயம்? ”

“திரிபுரசுந்தரி ஊருக்கு வந்திருக்கா. வீட்டுக்கு கூப்பிட்டா, போனேன். உபதேசம் பண்ண ஆரம்பிச்சிட்டா. இப்படி கெட்ட பேரு எடுத்துக்கிட்டு ஊரைச் சுத்துறதை விட ஊரை விட்டே போயி, எங்காவது மளிகைக் கட, வச்சுப் பிழைக்கலாம்னு வழி காட்டினா...ஊம்ம் நம்ம பிழைப்பு இந்த லெச்சனத்திலே இருக்கு”

ஒகோ, இதுவா சமாச்சாரம் என்று கொக்கரித்தது தங்கராசுவின் மனம். “அப்படியா அவ வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனா, பார்க்கலே, நீ பாத்திட்டியா! எப்படி இருக்கிறா!”

“அவளுக்கென்ன? முன்னாலே ராணி மாதிரி இருத்தாள்னா, இப்போ மகாராணி மாதிரி நடந்துக்கிறா. தோரணைக்கு ஒண்னும் குறைவில்லே, புருஷன்காரன் பணம் நிறையவே சம்பாதிக்கிறான்னு தெரியுது. பட்டுகளுக்கும் நகைகளுக்கும் குறைச்சல் இல்லே...”

“இருக்கலாம். சந்தோஷமா இருக்கிறாளாமா?” என்று தங்கராசு கேட்டான்.

“வசதிகளோடு வாழையிலே,தேவையானது எல்லாம் கிடைக்கையிலே, கையிலே ரொக்கப் பணம் வச்சுக் குலுக்க முடிகையிலே சந்தோஷம் இல்லாமலா போயிடும்? சந்தோஷமாத்தான் இருப்பா!”

“அப்படி இல்லே முத்துமாலை.! சந்தோஷம்கிறது இதுக்கெல்லாம் அப்பாற்பட்டதுன்னு உனக்குத் தெரியாதா என்ன? இதெல்லாம் இருந்தும் பலபேரு சந்தோஷமா இருக்க முடிகிறது இல்லே, இதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/86&oldid=1139403" இலிருந்து மீள்விக்கப்பட்டது