பக்கம்:இருட்டு ராஜா.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் ( 85 எதுவும் இல்லாமலிருந்தும் கூட, சில பேரு எப்பவும் சந்தோஷமா இருக்கிறாங்க, இல்லையா?” "அப்போ திரிபுரம் பணம், பவிசு, பகட்டுகளோடு வாழ்ந்தாலும் உண்மையிலே சந்தோஷமாக இல்லேன்னா சொல்றே?’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் முத்து క్షీ ! క్ష : , 'அப்படித்தான் தோணுது. அவளுக்கு ஏதோ மனக் குறை இருக்கத்தான்வேண்டும். தன்னுடைய குறைகளை, கவலைகளை, பிரச்னைகளை யாரிடமும் சொல்ல முடியாமல், தனக்குள்ளேயே எண்ணி எண்ணி குமுறிக் குமைந்து, குமைந்து அவளுக்கு நரம்புத்தளர்ச்சி நோயே வந்திருக்கு, ஹிஸ்டீரியா அடிக்கடி தலைகாட்டுதாம். மன சின் வறட்சியை, ஏமாற்றத்தை மூடி மறைக்கத்தான் அவள் பட்டும் பகட்டுமா, சந்தோஷமா இருப்பது மாதிரியான மேல்மினுக்கோடு வெளிச்சமிட்டுத் திரி கிறான்னு எண்ண வேண்டியிருக்கு!' முத்துமாலை யோசனையில் ஈடுபட்டான். "அவளுக்கு என்ன குறை இருக்கப் போகுது தங்க ராசு?’ என்று வியப்பாகக் கேட்டான் முத்துமாலை.

புருஷனைப் பற்றியதுதான். அவன் என்ன பண்ணி, எப்படிப்பணம் சேர்க்கிறானோ? இவளை எப்படி நடத்து கிறானோ? பணம் கொடுத்திட்டாப் போதுமா? உண்மையான அன்பும் ஆசையும் காட்ட வேண்டாமா? எங்கெங்கோ போறான் வாறான். வேறே பொம்பளைக உறவு இருக்கும். எத்தனையோ இருக்கலாம். இதை எல் லாம் திரிபுரம் வெளியே சொல்றது இல்லை!"

'ஓகோ இப்படி ஒரு நிலைமை இருக்குதா!' "இந்த ஊருக்கு அவள் வரணும்னு ஆசைப்பட்டாலும் அவன் அவளை அனுப்புறதில்லே. அந்தப் பட்டிகாட்டுக்கு இ-6