பக்கம்:இருட்டு ராஜா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90இருட்டு ராஜா

 அது போன்ற சமயத்தில் தான் அந்த நிகழ்ச்சி நடத்தது. பிற்பகல் இரண்டரை மூன்று மணி அளவுக்கு.

பத்தல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தற்செயலாகத் துாரத்திலிருந்து அதைப் பார்க்க நேர்ந்த ஒருவன் தீ தீ என்று கூப்பாடு போட்டான். ‘அம்மன் கோயில்லே தீ’ என்று கத்தினான்.

அவனுக்குச் சிலர் துணை சேர்ந்தாா்கள். ‘தீ தீ!’ என்று கூவிக் கொண்டு கோயில் பக்கம் ஓடினார்கள். அந்தக் கூச்சலும் திமு திமு ஒட்டமும் மற்றும் பலரைக் கவர்ந்திழுக்க, பலரும் விரைந்தார்கள். பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.

பந்தல் முற்றிலும் எரிந்து, மூங்கில்கள் வெடித்துச் சிதறுவதை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது அவர்களால். அங்கே தண்ணிர் வசதி எதுவுமில்லை, மொண்டு வீசித் தீயை அணைப்பதற்கு. மேலும் நன்கு காய்ந்த பிரப்பம்பாயும் மூங்கிலும். வேகமாகத் தீ பரவிப் படர்ந்து சாம்பலாக்கி விட்டது. அரை மணி நேரத்துக் குள் எல்லாம் முடிந்து போயிற்று.

தீ எப்படிப் பிடித்தது? யாராவது வைத்திருப்பார் களா? யார் பந்தலில் தீ வைத்திருக்கக கூடும்? இப்படி ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். விளக்கம் தான் கிடைக்கவில்லை.

இவ்வளவுக்கும் முத்துமாலை வீட்டில் படுத்து சுகமாகத் துாங்கிக் கொண்டிருந்தான். அம்மன் கோயில் பந்தல், தீப்பிடித்து எரிகிறது என்ற தகவல் காதில் விழுந்ததுமே, தனபாக்கியம் அவனை எழுப்பினாள்.

பகலில் உறக்கத்தின்போது முத்துமாலையை விழிப்புற வைப்பது அரும் பெரும் காரியமாகும். அவன் சரியான கும்பகர்ண வாரிசு இவ்விஷயத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/92&oldid=1139469" இலிருந்து மீள்விக்கப்பட்டது