பக்கம்:இருட்டு ராஜா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92இருட்டு ராஜா



—பாளைங்கோட்டையிலே தசரா சமயம், ஒரு தடவை ஒரு அம்மன் கோயில் முன்னாலே இப்படித் தான் பெரிய கொட்டகைப் பந்தல் மத்தியானம் பன்னிரண்ரை மணிக்கு, தீ புடிச்சு எரிஞ்சது. எப்படிப் புடிச்சுதுன்னு கடைசிவரை கண்டு பிடிக்கவே முடியலே, பள்ளிக் கூடம் விட்டு, பையன்கள் சாப்பாட்டுக்கு வீடு திரும்புகிற நேரம். அதனாலே படிக்கிற பையன்கள் கூட்டம் நிறையவே சேர்ந்திட்டது. திடீர்னு தீ எப்படிப் புடிச்சுருக்க முடியும்னு ஆராச்சியிலே இறங்கி விட்டானுக. படிக்கிறவங்க இல்லையா? ஆகவே புத்தி வேலை செய்தது பாஸ்பரஸ் என்பதை கொண்டாந்து யாரோ பந்தலில் போட்டுவிட்டுப் போயிருப்பான், ஈரம் உலர்ந்ததும் அது தானாகவே குபிர்னு பற்றிக் கொள்ளும்; அது தான் பந்தலையும் தீப்புடிக்கவச்சிருக்கும்னு சொன்னாக. பாஸ்பரஸ் என்கிறதை எப்பவும் தண்ணிரிலே தான் போட்டு வச்சிருப்பாங்களாம்.

“அது மாதிரி இங்கேயும் பாஸ்பரஸ் வந்து வேலை பண்ணியிருக்கும்கிறீரா!” என்று கிண்டலாகச் சொன்னான் முத்துமாலை.

“இல்லே. முன்னாலே நடந்த விஷயம் இப்போ நினைப்பிலே வந்து, சொன்னேன். பாஸ்பரஸ் என்கிற சமாச்சாரம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அதைச் சுலபமா வாங்கிவர முடியுமா? அப்படி அதை வாங்கி, சும்மா விளையாட்டா பந்தலிலே ஏன் போடணும்? இதை எல்லாம் பத்திப் பையன்கள் எண்ணிப்பார்க்கலியேங் கிறதுக்காகச் சொன்னனேன்” என்றார் அதைச் சொன்ன ஆசாமி.

“எல்லாரும் பேசத்தான் ஆசைப்படறாங்க. விஷயம் இருக்கோ இல்லையோ,சொல்கிற விஷயத்துக்கும் சந்தர்ப் பங்களுக்கும் பொருத்தம் இருக்குதோ இல்லையோ, எல்லாம் தெரிஞ்வங்க மாதிரி எதையாவது சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/94&oldid=1139498" இலிருந்து மீள்விக்கப்பட்டது