பக்கம்:இருட்டு ராஜா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்97


ஆளுக்கு ஒரு சக்கரமாகச் சீண்டி, காற்றைத்திறந்து விட்டார்கள்.

“அவனுக திட்டிவாசல் வழியாத்தான் வருவானுக. வேறுவழி கிடையாது. மதில் சுவரு ரொம்ப உசரம். ஏறிக் குதிக்க முடியாது. மேலும், அவனுகளுக்கு சந்தேகம் எதுவும் ஏற்பட்டிருக்காது. எவன் இந்த வேளையிலே இங்கே வரப்போறான்கிற தைரியத்தோடுதான் வேலை பண்ணுவாங்க. நாம ரொம்ப ரெடியா நிற்கணும்” என்று முத்துமாலை மெதுவான குரலில் பேசினான். பார் எந்த இடத்தில் நிற்கணும், என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொடுத்தான்.

நேரம் மிக மிக மெதுவாக ஊர்வது போலிருந்தது. அவர்களுக்கு தனிமை, இருட்டு. சில பூச்சிகள் ரீங்கரித்த வண்ணம் இருந்தன. சிறிது தொலைவில் ஒரு தவளை சாவுக்குரல் இழுத்து இரவின் அமைதியைக் கெடுத்தது. பாம்பின் வாயில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் அது.

நேரம் கடந்தது. எவ்வளவு நேரம் ஒடியிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

கோயிலுக்குள் ஓசைகள் எழுந்தன, திட்டி வாசல் திறந்து கொண்டது.

முதலில் ஒருவன் வெளியே வந்தான். உள்ளேயிருந்து ஒருவன் கனமான பொருளை நீட்ட, இவன் கஷ்டத்தோடு அதை வாங்கிக் கீழே வைத்தான். பிறகு மற்றொன்று தரப்பட்டது. அதையும் பெற்றுக்கொண்டான். இப்படி ஐந்து தடவை கொடுக்கல் வாங்கல் நடந்தது. முதல் இரண்டும் சற்றுப் பளுவானவை, மற்ற மூன்றும் அவ்வளவாகக் கனம் இல்லாதவை என்பதை அவர்கள் கொடுத்து வாங்கிக் குனிந்து வைத்த தன்மையிலிருந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/99&oldid=1139561" இலிருந்து மீள்விக்கப்பட்டது