24 25 26 200 இருபது சித்தர் பாடல்கள் பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள் விட்டுப் பிரியா மல் வீரியங்கள் தாம்பேசி விட்டுப் பிரிந் தவரே வேறு படுங்காலம் பட்டணமுந் தான்பறிபோய் என்கண்ணம்மா 1 படைமன்னர் மாண்டதென்ன! ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச் சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்; வேகாத காலறியேன் விதிமோச மானேனடி! நோகாமல் ந்ெதல்லோ என்கண்ணம்மா! நொடியில்மெழு கானேனடி I தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி! மாயக் கலவிவிட்டு மதிமயக்கந் தீர்ந்தக்கால் தாயுஞ் சதமாமோ என்கண்ணம்மா ! தந்தையரு மொப்பாமோ 1 அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி ! நெஞ்சாரப் பொய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்! கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா ! ஆண்டிருந்தா லாகாதோ! உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன் ? தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி! தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால் உன்னை மறக்காமல் என்கண்ணம்மா ! ஒத்திருந்து வாலேனோ! காயப் பதிதனிலே கந்தமூ லம்வாங்கி மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே மாயச் சுருளோலை என்கண்ணம்மா ! மடிமேல் விழுந்ததென்ன 27 28 68
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/202
தோற்றம்