இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்கண நாயனார் அருளிச்செய்த வாலைக்கும்மி காப்பு விநாயகர் துதி பின் முடுகு வெண்பா கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற செல்வியின்பேற் கும்மிதனைச் செப்புதற்கே-நல்விசய நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச பா தம்வஞ்ச நெஞ்சினில்வைப் பாம். கும்மி ணாமந் ந்த சத்தி சடாதரி வாலைப்பெண் உத்தமி மேற்கும்மிப் பாட்டுரைக்க வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை சித்தி விநாயகன் காப்பாமே. சரஸ்வதி துதி சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்தச் சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத் தத்திமி தோமென ஆடுஞ் சரஸ்வதி பத்தினி பொற்பதங் காப்பாமே. சிவபெருமான் துதி எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின் தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக் கங்கை யணிசிவ சம்புலாஞ் சற்குரு பங்கயப் பொற்பதங் காப்பாமே. 2 3