உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 5 6 வாலைக்கும்மி சுப்பிரமணியர் துதி ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு மானைப்பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும் மால்முரு கேசனுங் காப்பாமே. விஷ்ணு துதி ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக் காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொற்பதங் காப்பாமே. நந்தீசர் துதி அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச் சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொற்பதங் காப்பாமே. நூல் தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய வல்லவள் வாலைப்பெண் மீதினிலே சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும் தொல்லை வினைபோக்கும் வாலைப்பெண்ணே! மாதா பிதாகூட இல்லாம லேவெளி மண்ணும் விண் ணுமுண்டு பண்ணவென்று பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று புகுந்தா ளிந்தப் புவியடக்கம். வேதமும் பூதமுண் டானது வும்வெளி விஞ்ஞான சாத்திர மானதுவும் நாதமுங் கீதமுண் டானது வும்வழி நான் சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே ! 7. 00 9 10