உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இருபது சித்தர் பாடல்கள் முந்தச் செகங்களுண் டானது வும்முதல் தெய்வமுந் தேவருண் டானதுவும் விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே! அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம்; பின்னும் அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்; தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம். ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத் துமென்று பேரானாள்; நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல ஞான வகையிவள் தானானாள். ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும் ஓமென் றெழுத்தே யுயிராச்சு; ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை யாடிக் கும்மி யடியுங்கடி. செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்; உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும் உற்பன மானது மஞ்செழுத்தாம். சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந் தானுமே பார்த்திருந் தாலுமென்ன? சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு சொல்லை யறிந்தல்லோ காணவேணும்? காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரிய மில்லையென் றேநினைத்தால்; காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில் காரிய முண்டு தியானஞ்செய்தால். 11 12 13 14 15 16 17