கருவூரார் பூஜா விதி காப்பு எண்சீர் விருத்தம் தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்; செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்; வழியதனில் நல்லவழி ஞானங் கூடும்; மகத்தான வேதாந்தஞ் சித்தி காட்டும்; ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார் உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும்; வெளியதனில் வெளியாகி நாதத் துள்ளே விளங்கிநின்ற வாலைப்பெண் ணாதி காப்பே ! நூல் ஆதியந்தம் வாலையவ ளிருந்த வீடே ஆச்சரியம மெத்தமெத்த அதுதான் பாரு ; சோதியந்த நடுவீடு பீட மாகிச் சொகுசுபெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ணாத்தாள்; வீதியந்த ஆறுதெரு அமர்ந்த வீதி விளையாடி நின்றதிரு மாளி கண்டாய் திமதி சூடியே யிருந்த சாமி பத்துவய தாகுமிந்த வாமி தானே. வாமியிவள் மர்மம்வைத்துப் பூசை பண்ண மதியுனக்கு வேணுமடா அதிக மாக ; காமிவெகு சாமிசிவ காமி ரூபி காணரிது சிறுபிள்ளை கன்னி கன்னி 1 ஆமிவளை யறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலு மனமடக்க மறிய வேணும்; நாமிவளைப் பூசைபண்ண நினைத்த வாறு நாட்டிலே சொல்லவென்றால் நகைப்பார் காணே. 2
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/239
தோற்றம்