உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 இருபது சித்தர் பாடல்கள் பாரேது புனலேது அனலு மேது? பாங்கான காலேது? வெளியு மாகும் நாரேது பூவேது வாச மேது? நல்லபுட்பம் தானேது பூசை யேது? ஊரேது பேரேது சினமு மேது? ஓகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்! ஆறேது குளமேது கோயி லேது? ஆதிவைத்தை யறிவதனா லறிய லாமே. ஆமெனவும் ஊமெனவும் மிரண்டுங் கூட்டி அப்பனே ஓமென்ற மூன்று மொன்றாய் நாமெனவுந் தாமெனவு மொன்றே யாகும்; நல்லவர்க ளறிவார்கள்; காமி காணான்; வாமம்வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம் வந்தவர்க்குச் சத்திசிறு பிள்ளை வாலை சோமநதி யமுதமுண்ண வாவா வென்பாள்; சுகமுனக்குப் பரமசுக மருள்செய் வாளே. செய்குவாய் பூசையது செய்யும் போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்; உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம்; ஊமையென்ற நடுத்தீபை யதிகங் கொண்டால் பைகுவாய் அரவுவிடம் பொசுங்கிப் போகும் ; பங்கமுனக் கில்லையடா அங்க மீதில் ஐகுவா யுள்ளடக்கிப் பேச்சை விட்டே அழைத்திடவே யஞ்சுமது கொஞ்சுங் காணே காணாத காட்சியெல்லாங் கண்ணிற் காணும் கலங்காதே மெய்ம்மயக்கம் மெத்த வாகும் பூணாத பணிபூண்டு சிறுபெண் ணாகப் போதமெனும் பொருள்பறிக்க வருவாள் கண்டாய்; 10 11 12