242 இருபது சித்தர் பாடல்கள் பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப் புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப் பாசையது மிகபேசிப் பாட்டும் பாடிப் படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்; ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப் பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பிப் பேசு வானே. பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய்ப் பேசிப் பேசிப் பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார் நிர்மூட ரனேகவித சாலங் கற்றே ஆச்சென்றா லதனாலே வருவ தேது? ? ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்; மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும்; மோசமது போகாதே முக்கால் பாரே. முக்காலும் பொருந்துமென்று சொன்ன போதே மோசமில்லை சூட்சமது மொழிந்து கூடும்; தக்காமற் போனபே ரனேக ருண்டு; சமர்த்தறிந்தா லவன்வாமி யவனே சித்தன் ; எக்காலும் நடந்திருநீ கா லுமுன்னி இருந்தடங்கி யுள்ளிருந்து வெளியிற் போன அக்காலைக் காணாம லலைந்தே யோடி 17 18 அழிந்துகெட்டுப் போனவர்கள் அறிந்து கொள்ளே. 19 அறிந்தகுறி யடையாளங் காண வேண்டும்; அக்குறியிற் சொக்கிமனந் தேற வேண்டும்; அறிந்தவன்போ லடங்கியன மிறக்க வேண்டும்; அலகையது வழிபாதை அறிய வேண்டும்;
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/244
தோற்றம்