இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாலானந்த சுவாமிகள் அருளிய ஞானக்கும்மி காப்பு சீர்மேவு ஞான வடிவான-பர தேசிகன் சற்குரு தன்னருளாற் பார்மீதில் ஞானக்கும் மிபாடச் - சிவ பாலன் கணபதி காப்பாமே. அம்பிகை வாலை பதம்போற்றி-அருள் ஆனந்தக் கும்மித் தமிழ்பாடத் தும்பி முகனுக் கிளையவ னாஞ்சிவ சுப்பிர மண்யனுங் காப்பாமே நாலாம் வேதமு மோராறும்- வெகு நாநா பேதமாய் நின்றானை மேலாய்ப் போற்றிக்கும் மிபாடச் - செந்தில் வேலவன் தன்பதங் காப்பாமே. பாரி லுயர்மது ராபுரியில் - வாலை சாமிசொல் லுங்கும்மிப் பாடலுக்கு மேரு வதனடி மூலமுக் கோண விநாயகன் தன்பதங் காப்பாமே. ஆதியும் அந்தமு மொன்றாகி வளர் அண்டபிண் டம்மி ரண்டாகிச் சாதி பலபல வேறா கிநின்ற தத்துவங் கேளடி ஞானப்பெண்ணே! தேகமா னதோர்ம லபாண்டம் -அதிற் சிற்பணம் வந்திடு முற்பணத்தை யோக மெனுந்தமிழ்ப் பாடலுக்கு - மனம் உவந்து கேளடி ஞானப்பெண்ணே ! 1 2 3 5 6