ஞானக்கும்மி 251 மிச்ச மிருந்தநெல் லுத்தொகை யில்வாரம் விண்ணுறு நோய்கொண்ட பேயனுடன் அச்சுதன் சேயனுந் துங்கக்கோ னானுமாய் அழித்துப்போட் டாரடி ஞானப்பெண்ணே 135 நிலம்பி ளைந்ததுங் காணீ ரோவதிற் செலவ ழிந்ததும் பாரீரோ ? அலமந் துதிரி யாம லேயருள் ஆனந்தஞ் சேரடி ஞானப்பெண்ணே! எண்சா ணீள மொருவீ டாமதில் எட்டொரு பீற்றல் மலக்கூடாம்; பஞ்சாயக் காரரீ ரைந்துபே ருந்தெய்வப் பதியி தென்கிறார் ஞானப்பெண்ணே! தேக மென்னுஞ் சிவாலய மாமதிற் சென்னி சிறுவாயிற் கோபுரமாம்; காக மான விரண்டு கரக்கோடுங் 36 37 கையாங் கேளடி ஞானப்பெண்ணே ! 38. உண்ணாக் கென்ற கொடிமர மாமதிற் அண்ணாக் கென்ற வலப்புறத் திற்க கோபுர சந்திர புட்கரணி தக்கினி தீர்த்தமாம் ஞானப்பெண்ணே! நாற்பத்து முக்கோண மண்டப மாமதன் நடுவி ருக்குதாஞ் சிங்காரம்; பார்ப்பது சக்கரக் கோட்டையி லேயிந்தப் படியி ருக்குதாம் ஞானப்பெண்ணே ! பீட மிருப்பது மையத்தி லேபலி பீட மிருப்பதுங் குய்யத்திலே; மாட மிருந்த சிவாலயத் தின்மணி விளக்கி ருக்குது ஞானப்பெண்ணே ! 39 40 41
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/253
தோற்றம்