ஞானக்கும்மி மாயன் அரண்மனை காணீ ரோவன்னி மரமி ருப்பதுந் தோணீரோ? நேய மதுகடந் தப்பா லேயறு கோணப் படியடி ஞானப்பெண்ணே ! கோணத்தில் நின்று மயங்கா தேசுழிக் காற்றை யடக்கிச் சிணுங்காதே; வீணுக் கலைந்து தியங்கா தேதூல் 258 49 வேடத்தைத் தள்ளடி ஞானப்பெண்ணே! 50 தூலத்தை விட்டு விடாயா கிலதிற் சூட்சத்தைக் காண முடியாது; பாதையி தல்லவோ ஞானப்பெண்ணே ! 51 பாலத்தி லேறி நடந்தக் காற்பெரும் பாதையா னபெரும் பாதையைக் கிட்டிடப் பட்டண முண்டொரு வட்டமதாய்; நாதமுங் கீதமுங் கேட்குத டிதெய்வ சந்நிதி யென்னடி கண்டதுண் டோகண்டால் நாயகன் சந்நிதி ஞானப்பெண்ணே ! தத்துவம் பேசத் திறமுமுண்டோ ? முன்னேமுப் பாழுங் கடப்பதுண் டோ அதில் முச்சுட ருண்டடி ஞானப்பெண்ணே ! ண 52 53 முச்சுடர் வட்டமே சக்கர மாமது மூக்கு நுனியிற் சுழுமுனையாம்; அச்சுடர் வட்டத் திருந்தவ னேகுரு ஆனந்த நந்தியாம் ஞானப்பெண்ணே ! 54 நந்தி யிருந்தது வன்னிவட் டம்மதில் நாட்டம் புருவமத் யானதிட்டம்; சந்திர னுங்கதிர்ச் சூரிய னுமந்தத் தலத்தில் நின்றனர் ஞானப்பெண்ணே ! 55
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/255
தோற்றம்