பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 இரு பெருந்தல்வர் பணியில் ஈடுபட்டார். சென்னையிலிருந்த சர்வில்லியம் பர்ட்டன்' என்ற நீதி மன்றத் தலைவரும் வெளிப்படையாகவே பாதிரிமார்கள்பால் பரிவு காட்டினார் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நீதிபதி இருக்கையிலிருந்துகொண்டே கிறிஸ்தவ மத உபதேசங்களை நீதி மன்றத்திலிருந்து இந்துக்களுக்கு வழங்கினார் திருநெல்வேலிக் கலெக்டர் தாமச்சுக்கு உறவினரும், சென்னை அரசாங்கத் தலைமை செயலாளராய் இருந்தவங்தவருமாகிய இன்னொரு தாமஸ், அரசாங்கத்தில் இந்துக்களைப் புறக்கணித்துவிட்டு, கிறிஸ்தவர்களுக்கே பணிகளை வழங்கினார் செங்கற்பட்டு மாவட்ட நீதிபதியாய் இருக்த மேசர்ஹெட்" என்ற ஒருவர், ஒரு நாள் தம்முடைய நீதிமன்ற நடவடிக்கைகளை எல்லாம் நிறுத்திவிட்டு, எங்கிருக்தோ வந்த ஒரு கிறிஸ்தவப் பாதிசியார் தப்பான பிரசாரம் செய்வதற்குத் தம் நீதிமன்ற மன்டபத்தை கொடுத்து உதவினர். சுருங்கச் சொன்னால், சென்னைஅரசாங்கமே ஒர் வஞ்சகமாய் கடந்துகொண்டது எனலாம் ; மதச் சார்புடைய தங்கள் முறையற்ற வேண்டுகோள்கட்கு இனங்காமையால், சென்னையிலிருந்த நீதி மன்றத் தலைவரையே வேலையினின்றும் நீக்கத் துணிந்தது. அந்நாளில் லிவின் என்பார் ஒரு முறை தம் இந்து நண்பர்கள் தமக்களித்த வாழ்த்துரைக்குப் பதிலளித்தபோது கூறியுள்ள வாசகங்கள், அக்கால நிலையை நமக்குக் கண்ணேதிரே கொண்டுவந்து காட்டும், அப்பெரியார் பின் வருமாறு பேசியுள்ளார்: சென்னை அரசாங்கம் தனது முறையற்ற கட்டளைகளே நீதிபதிகளின்மேல் சுமத்தி, அறத்திற்குப் பழுதுாட்டச் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பில்லா