உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல்

11


பாதிரிமார்களுக்கு வெளிப்படையாக அவர்கள் காட்டிய பரிவை அதற்குப்பின் மறைமுகமாகக் காட்டத் தொடங்கினார்கள். மக்கள் கண்ணில் தாங்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல நடித்தார்கள். அரசாங்கம் 'கிரெஸண்ட்' தாளின்மேல் கடுங்கோபம் கொண்டு பிற செய்தித் தாள்களுக்கு வழங்கிய சிறு சலுகைகளையுயும் வழங்க மறுத்தது ; பல வகைகளிலும் புறக்கணிப்பையும் துன்பத்தையும் கொடுத்தது.

இந்நிலையில் அரசாங்க அதிகாரிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் சொத்துரிமை கேடுறா வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரத் திட்ட மிட்டார்கள். அச்சட்டம் மதம் மாறுவோர்க்குப் பெருத்த ஆதரவளிக்கும் நோக்கமுடையதாய் இருந்தது. அதைக் கண்டு இந்து மக்கள் ஆற்றொணாக் கோபங்கொண்டார்கள். 1845-ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள், 9-ஆம் நாள் லட்சுமி நரசிம்முலு சென்னையின் குடிமக்களைக் கொண்டதொரு பெருங்கூட்டத்தைக் கூட்டினர். ஏராளமான மக்கள் அக்கூட்டதிற்கு வந்து அரசாங்க அதிகாரிகளால் கொண்டுவரப்பட இருந்த சட்டத்தை எதிர்த்து ஒரு மனமாகத் தீர்மானம் செய்தார்கள்; அத்தீர்மானத்தை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்கள். மக்களின் தீர்மானத்தை ஆங்கில நாட்டின் மேலிட அரசியலார் கண்டு ஆழ்ந்த கவனம் செலுத்தினர். அதன் பயனாக, கொண்டுவரப்பட இருந்த சட்டத்தில் தீங்கு பயப்பனவாய் இருந்த பகுதிகள் உடனடியாக நீக்கப்பட்டன.

எதிர்பார்த்தவாறு தங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியாமல் போனதும், பாதிரிமார்கள்